முகப்பு
செய்திகள்

பிரம்மயுகம் கூட்டணியில் இணைந்த பிரணவ் மோகன்லால்!

பிரணவ் மோகன்லாலின் புதிய படம் குறித்து...

Updated On : 24 மார்ச் 2025, 3:20 pm IST
பகிர்:

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.

தொடர்ந்து, வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அதேநேரம், குறைவான படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.

Advertisement

Advertisement

எப்போதும் வெளிநாட்டு பயணங்களிலேயே இருப்பதும் அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை வாழ்வதையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார். பெரும்பாலும் கேரளத்தில் இருக்க மாட்டார்.

இந்த நிலையில், பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது, இக்கூட்டணியின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதுவும் ஹாரர் படமாகவே உருவாகிறது.

மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படம் கருப்பு வெள்ளை திரைப்படமாகவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.80 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.