முகப்பு
செய்திகள்

ரசவாதிக்கு 3 விருதுகள்! சிறந்த நடிகர் விருது பெறும் அர்ஜுன்தாஸ்!

ரசவாதி திரைப்படத்துக்காக நடிகர் அர்ஜுன்தாஸுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படவுள்ளதாகத் தகவல்

Updated On : 1 மே 2025, 8:35 pm IST
பகிர்:

ரசவாதி திரைப்படத்துக்காக நடிகர் அர்ஜுன்தாஸுக்கு 2-வது முறையாக சிறந்த நடிகர் விருது வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவான ரசவாதி படத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் அவரது நடிப்புக்கு பலரால் பாராட்டுகளைப் பெற உதவியது. இந்த நிலையில், தாதா சாகிப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ரசவாதி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படத்துக்கு ஏற்கெனவே 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ரசவாதி திரைப்படத்துக்கு, லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி மற்றும் வடிவமைப்புக்கான விருதும், நியூஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், ஒரே படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருதை இருமுறை பெறவுள்ளார், நடிகர் அர்ஜுன்தாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments