FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

எந்தன் உலகம் நீயே... சின்ன திரை நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கம்!

எந்தன் உலகம் நீ தான் என சின்ன திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Updated On : 13 மே 2025, 5:08 pm IST
நாஞ்சில் விஜயன் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

எந்தன் உலகம் நீ தான் என சின்ன திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர் நாஞ்சில் விஜயன். தனது தனித்துவமான நடிப்பாலும் நகைச்சுவை திறனாலும், சிறந்த பொழுதுபோக்குக் கலைஞரான நாஞ்சில் விஜயன், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மரியா என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு நிகழ்ச்சிகளில் ஜோடியாகப் பங்கேற்பது, அடிக்கடி சமூகவலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

இதனிடையே நாஞ்சின் விஜயன் - மரியா தம்பதிக்கு நேற்று (மே 12) பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனது ரசிகர்களுடன் நாஞ்சில் விஜயன் இன்று பகிர்ந்துள்ளார்.

அதில், மகளை முதல்முறையாகக் கையில் ஏந்திக்கொள்ளும் விடியோவை வெளியிட்டு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

’’சித்திரை முழு நிலவில் என்னை அப்பா என்று அழைப்பதற்கு இந்த புவியில் புதியதாய் ஒரு உயிர் பிறந்து விட்டது. வாழ்க்கையில் நான் பட்ட வேதனைகள் எத்தனை எத்தனையோ, அத்தனையும் உந்தன் முகம் பார்க்கும் பொழுது மறந்து போனது என் தங்கமே; இனிமேல் எந்தன் உலகம் நீ தான்’’ என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments