FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அயலி தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

சின்ன திரை நடிகை தேஜஸ்வினி கெளடா நாயகியாக நடிக்கும் அயலி தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 மே 2025, 4:32 pm IST
தேஜஸ்வினி கெளடா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

சின்ன திரை நடிகை தேஜஸ்வினி கெளடா நாயகியாக நடிக்கும் அயலி தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழில் வித்யா நம்பர் ஒன் தொடருக்கு அடுத்தபடியாக அயலியில் தேஜஸ்வினி நடிப்பதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான நடிப்பை வழங்கும் தேஜஸ்வினி, அயலி தொடரில் இரு வகையான குணாதிசயங்கள் கொண்ட பெண்ணாக நடிக்கவுள்ளார். இதனால், வித்தியாசமான நடிப்பை தேஜஸ்வினி வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement

வீட்டில் இருக்கும்போது பெரியோர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் (தவறாகவே சொன்னாலும்) சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்ணாகவும், வெளியே இதற்கு நேர்மாறாக எதற்கும் அஞ்சாமல், அநியாயத்தை எதிர்க்கும் புரட்சிப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

அயலி முன்னோட்டத்திலிருந்து...

இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், இருவேறு பாத்திரங்களின் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான கதையம்சம் கொண்டதால், இதில், தேஜஸ்வினியின் நடிப்பு திறமை முழுமையாக வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் நாயகனாக ஆனந்த் செல்வன் நடிக்கிறார்.

தேஜஸ்வினியின் பயணம்

2016-ல் தெலுங்கு மொழியில் கோயிலம்மா என்ற தொடரில் அறிமுகமான தேஜஸ்வினி, 2018-ல் கன்னட மொழித் தொடரிலும் நடித்துள்ளார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த வித்யா நம்பர் ஒன் என்ற தொடர் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழில் இவரின் மூன்றாவது தொடராக அயலி ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் ஜுன் 2ஆம் தேதி முதல் திங்கள் - வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | திருமண நாள்! மறைந்த கணவரை நினைவுகூர்ந்த சீரியல் நடிகை!

இதையும் படிக்க | ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆல்யா மானசாவின் புதிய தொடர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments