டிசி! லோகேஷ் கனகராஜ் படத்தின் புரோமோ!
லோகேஷ் - அருண் மாதேஸ்வரன் படத்தின் டீசர்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்காக, லோகேஷ் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொண்டார்.
இப்படத்திற்கான பூஜையும் அண்மையில் நடைபெற்று படப்பிடிப்பும் துவங்கியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்திற்கு டிசி (DC) எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர்.
புரோமோவில் ரத்தகறையுடன் லோகேஷ் கனகராஜ் நடந்துவருவதும் பாலியல் தொழிலாளியாக வாமிகாவும் நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: சிம்பு சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மாரி செல்வராஜ்!
director lokesh kanagaraj's starring movie titled as DC
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.