முகப்பு
செய்திகள்

ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் பிரம்மயுகம்!

ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் திரைப்படம் பற்றி...

Updated On : 7 நவம்பர் 2025, 11:26 am IST
பிரம்மயுகம் படத்தில் மம்மூட்டி... - படம்: எக்ஸ் / மம்மூட்டி.
பகிர்:

ஆஸ்கர் மியூசியத்தில் மம்மூட்டியின் பிரம்மயுகம் திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் சதாசிவன் இயக்கிய பிரம்மயுகம் திரைப்படம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் மம்மூட்டி இந்தப் படத்தில் பூதமாக நடித்திருப்பார். மலையாளத்தின் பழங்குடியின கதைகளை மையமாக வைத்து சாதிய மேட்டிமைத்தனங்களைக் கேள்விக்குள்ளாக்கும் படமாக இந்தப் படம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் படத்திற்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதும் கிடைத்தது.

இவருடன் சேர்த்து படக்குழுவுக்கும் மொத்தமாக 4 விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆஸ்கர் மியூசியத்தின் மதிப்புமிக்க திரையரங்கில் இந்தத் திரைப்படம் பிப்.2026-இல் திரையிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய புதிய படம் ரூ.50 கோடிகளைத் தாண்டி அசத்தி வருகிறது.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

summary

It has been announced that Mammootty's film Brahma Yugam will be screened at the Oscar Museum.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments