கவினின் கிஸ்: ஓடிடியில் எப்போது?
கவினின் கிஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
நடிகர் கவினின் கிஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ப்ரீத்தி அஸ்ரானி உடன் நடிகர் கவின் நடித்து வெளியான படம் கிஸ்.
இப்படம் ஜென் மார்டின் இசையமைப்பில் ரொமாரியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
மேலும், இந்தப் படத்தில் விடிவி கணேஷ், தேவயானி, கௌசல்யா, ஆர்ஜே விஜய், கல்யாண் மாஸ்டர் மற்றும் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கிஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் வெளியான பிளடி பெக்கர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை இப்படம் சந்திக்கவில்லை.
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் கவினின் மற்றொரு படமான ‘மாஸ்க்’ நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியான ஜிவி பிரகாஷ் குமாரின் பிளாக்மெயில்!
Information regarding the OTT release of actor Kavin's film Kiss has been revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.