ஓடிடியில் கண்ணப்பா!
ஓடிடியில் வெளியானது கண்ணப்பா...
பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சிவ பக்தரின் கதையாக உருவான படமென்பதால் இதன் வணிக நோக்கிறாக இந்தியளவில் பிரபலமான நடிகர்கள் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால் இளம் நாயகி ப்ரீத்தி முந்தன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், மோகன் பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
ஆனால், படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ. 40 கோடி மட்டும் வசூலித்து மிகப்பெரிய தோல்விப்படமானது.
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: 40 படங்களில் நடித்துவிட்டேன், ஆனால்... துல்கர் சல்மான் பேச்சு!
kannappa movie released in amazon ott site
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.