யு சான்றிதழுடன் வெளியாகும் முதல் அர்ஜுன் தாஸ் திரைப்படம்!
நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம் படம் குறித்து...
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கைச் சான்றிதழ் இந்தப் படத்துக்கு யு சான்றிதழை அளித்துள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் பாம் எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாத்மிகா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.
டி. இமான் இசையமையில் உருவாகும் இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் தமிழ்ப் படங்களில் முதல்முறையாக யு சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் செப்.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
The censor certificate of the film 'Pam' starring actor Arjun Das has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.