தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன் லால்!
நடிகர் மோகன் லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளது குறித்து...
வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லால் இன்று (செப். 23) பெற்றுக்கொண்டார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது. இதில், தேசிய விருதுக்குத் தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருது வழங்கி வருகிறார்.
தேர்வான கலைஞர்கள் விருது பெற்று வரும் நிலையில், சினிமாவில் செய்த பணிகளைப் பாராட்டி, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
Advertisement
Advertisement
அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த மிகுந்த நெகிழ்ச்சியுடன் மோகன்லால் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க | பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!
Mohanlal receives Dadasaheb Phalke Award
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.