போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!
போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர் குறித்து...
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ என்ற புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், லுதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், சித்தார்த் பாபு, பிரமோதினி, நம்ரிதா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த இணையத் தொடருக்கு மணிகண்டன் ராமமூர்த்தி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
போலீஸ் போலீஸ் மற்றும் வேர மாரி லவ் ஸ்டோரி இணையத் தொடர்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிதம்பரம் மணிவண்ணன் இந்தத் தொடரை இயக்குகிறார்.
இவர் இயக்கிய உப்பு புளி காரம் என்ற இணையத் தொடருக்கும் தனி ரசிகர்கள் இருந்தனர். இந்தத் தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இவர், ஆன்மீகத் தொகுப்புப் படமான 'அனந்தா' படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருந்தார்.
இந்த நிலையில், 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
Actor and director Bose Venkat is starring in a new web series titled 'Brothers and Sisters'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.