FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

35 கோடி பார்வைகளைக் கடந்த ராமாயணா டிரைலர்!

ராமாயணா டிரைலர் அதிவேக சாதனையைச் செய்துள்ளது...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 11:02 am IST
பகிர்:

ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் அதிவேகமாக கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

தங்கல், சிச்சோர் படங்களுக்குப் பிரபலமான இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

நேரடியாக ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் ஒவ்வொரு காட்சிகளுக்குமான விஎஃப்எக்ஸ் பணிகள், செரிவான ஒளியமைப்புகள் அனைத்தும் அபாரமான அனுபவத்தைக் கொடுப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

சுவாரஸ்யமாக, டிரைலரின் முதல் காட்சியே ராவணனான யஷ், எப்படி அரசனாக மாறினார் எனக் காட்டப்பட்டு பின் ராமனை அறிமுகம் செய்கின்றனர்.

இந்த நிலையில், அனைத்து மொழிகளிலும் சேர்ந்து இந்த டிரைலர் யூடியூபில் 350 மில்லியன் (35 கோடி) பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது. மிக விரைவாக இந்த சாதனையைச் செய்த பான் இந்தியப் படமாகவும் மாறியுள்ளது.

The trailer for the movie Ramayana has rapidly garnered tens of millions of views.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments