FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சூர்யா - 47 திரைப்படத்தின் பெயர் இதுவா?

சூர்யா - 47 திரைப்பட பெயர் குறித்து...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:20 pm IST
நடிகர் சூர்யா
பகிர்:

நடிகர் சூர்யா நடித்த அவரது 47-வது திரைப்படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், சூர்யா - 47 ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த நிலையில், இப்படத்திற்கு ‘சீனு’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான சீனு திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

A poster for actor Suriya's 47th film has been released to mark his birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments