FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வெளியானது சசிகுமாரின் வதந்தி - 2!

வதந்தி - 2 இணையத் தொடர் ஓடிடியில் வெளியானது...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:20 pm IST
பகிர்:

நடிகர் சசிகுமார் நடித்த வதந்தி - 2 இணையத் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விக்ரம் வேதா திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் தயாரிப்பில், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் “வதந்தி”. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்த இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையடுத்து, வதந்தி 2 இணையத் தொடர் உருவானது. இதில், நடிகர் சசிகுமார் மூஸா ராஜா எனும் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, அனகா, யஷ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள “வதந்தி - தி மிஸ்டரி ஆஃப் மணி” இணையத் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் இத்தொடர் 8 எபிசோடுகளாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு எபிசோடுகளும் 40 நிமிட கால அளவாக உள்ளது.

The web series Vadhanthi 2, starring actor Sasikumar, has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments