FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் 10 கோடி நிமிடங்கள்! நூறு சாமி படத்துக்கு வரவேற்பு!

நூறு சாமி திரைப்படம் ஓடிடி தளத்தில் 10 கோடி நிமிட பார்வைகளைக் கடந்துள்ளது குறித்து...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 6:24 pm IST
நூறு சாமி போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

ஓடிடி தளத்தில் நூறுசாமி திரைப்படம், குறைந்த நேரத்தில் 10 கோடி நிமிட பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, இயக்குநர் சசியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நூறு சாமி.

நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்‌ஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கணவனை இழந்த பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதும், அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கதைக்களமாகக் கொண்ட இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நூறு சாமி படம் கடந்த வாரம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி 10 கோடி நிமிட பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக ஜீ5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

summary

The movie Noorusamy has set a record by surpassing 10 crore minutes of watch time in a short period.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments