நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 வெளியீட்டில் மாற்றம்?
ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டதாகத் தகவல்...
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது. இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தை நவ. 5 ஆம் தேதி வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், தீபாவளி வெளியீட்டாக இப்படத்தைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் ராஜ்கமல் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Reports indicate that there has been a change in the release of the movie Jailer 2, starring actor Rajinikanth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.