விபத்தால் சில நாள்கள் நினைவாற்றலை இழந்த வானம் பட நடிகை!
நடிகை ஜாஸ்மின் பாசின் தனக்கு ஏற்பட்ட நினைவாற்றல் இழப்பு குறித்து பேசியுள்ளார்...
நடிகை ஜாஸ்மின் பாசின் தனக்கு நிகழ்ந்த தற்காலிக நினைவாற்றல் இழப்பு குறித்து பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகையான ஜாஸ்மிம் பாசின் தமிழில் நடிகர் சிலம்பரசனுடன் வானம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பணக்கார பெண்ணான ப்ரியா என்கிற கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் வந்தாலும் அதிகம் கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து பாலிவுட்டில் சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். தற்போது, உடல் மற்றும் மன உறுதியைச் சோதிக்கும் நிகழ்ச்சியான கத்ரோன் கே கில்லாடி சீசன் - 15ல் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சி கலர்ஸ் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் இந்நிகழ்ச்சிக்காக மேலே இருந்து நீரில் குதித்த போது, ஜாஸ்மின் பாசினுக்கு தலையில் லேசாக அடிபட்டது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சையளித்தனர்.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள ஜாஸ்மின், விபத்து நடந்ததிலிருந்து அடுத்த 72 மணி நேரங்கள் வரை தன் நினைவாற்றலை இழந்து என்ன நடந்தது என்றே தெரியாமல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். விபத்தால் மூளையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
Actress Jasmin Bhasin has spoken about the temporary memory loss she experienced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.