சாய் அபயங்கரின் ரதிமா பாடல் வெளியீட்டுத் தேதி!
ரதிமா ஆல்பம் பாடல் வெளியீட்டுத் தேதி...
சாய் அபயங்கரின் ரதிமா பாடலின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சில மாதங்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.
தற்போது, தன்னுடைய 6-வது ஆல்பம் பாடலுக்கு சாய், ‘ரதிமா’ எனப் பெயரிட்டுள்ளார். முன்னணி நடிகைகளைத் தன் ஆல்பங்களில் ஆட வைக்கும் சாய் அபயங்கர் இம்முறை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸை ரதிமா ஆல்பத்தில் நடிக்க வைத்துள்ளார்.
Advertisement
Advertisement
தெலுங்கு நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, சிவகார்த்திகேயனுடன் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரதிமா ஆல்பம் ஆக. 24 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை விவேக் எழுதியுள்ளார்.
The release date for Sai Abhyankar's song 'Radhiima' has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.