நிண்ட சிரி கண்டப்போள்... 10 கோடி பார்வைகளைக் கடந்த கல்யாணி பாடல்!
பிரபல பாடல் 10 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது...
பாடகி ஷ்ரேயா கோஷல் பாடிய கல்யாணி பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
திரையிசைப் பாடல்களுக்கு இணையாக ஆல்பம் பாடல்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்தியளவில் பல மொழிகளிலும் வித்தியாசமான ஆல்பங்கள் வந்துகொண்டே இருப்பதால் அவற்றுக்கான வணிகமும் பெரிதாகியுள்ளது.
அப்படி, மலையாளத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் பாடல் கல்யாணி. இதனை, அர்ஜன், கேடிஸ் மற்றும் பிப்டி4 ஆகியோர் இசையமைத்து பாடியிருந்தனர். பாடல் வெளியான சில நாள்களிலேயே இன்ஸ்டாகிராமில் பற்றிக்கொள்ள இந்தியளவில் இதற்கு ரீல்ஸ்களாக செய்து குவித்தனர். முக்கியமாக, சுஹாஸ் மொய்தீன் எழுதிய இப்பாடலின், “சிரிக்கள்ளே பெண்ணே கல்யாணி.... நிண்ட சிரி கண்டப்போள்” வரிகள் அபாரமான ஹிட்டை அடித்தன.
Advertisement
Advertisement
இப்பாடலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் யூடியூபில் நடிகை சானியா அய்யப்பன் நடனத்தில் பாடகி ஷ்ரேயா கோஷல் குரலில் இதன் புதிய விடியோ வடிவம் வெளியானது. இப்போது வரை இது 10 கோடிக்கும் (100 மில்லியன்) அதிகமான பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது. மேலும், நாளும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இன்று யார் கேட்கிறார் என காமெண்ட் இட்டு வருகின்றனர். முதல் வடிவத்தைவிட தற்போது ஷ்ரேயா கோஷல் குரலில் இப்பாடல் இன்னும் சிறப்பாக இருப்பதாகவும் கருத்துகள் பதிவாகியுள்ளன.
The song Kalyani, sung by Shreya Ghoshal, has crossed 100 million views
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.