பிரியதர்ஷன் இயக்கிய ஹய்வான் திரைப்பட டிரைலர்!
ஹய்வான் டிரைலர் வெளியாகியுள்ளது...
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர்கள் அக்ஷய் குமார், சயிஃப் அலிகான் நடித்த ஹய்வான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் பிரபலமான இயக்குநரான பிரியதர்ஷன் 96 திரைப்படங்களை இயக்கிவிட்டார். இதில், பல வெற்றிப் படங்களும் தேசிய விருது படங்களும் அடக்கம்.
இறுதியாக, நடிகர் மோகன்லாலை வைத்து மரக்காயர் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, பிரியதர்ஷன் அவர் இயக்கிய ஒப்பம் என்கிற மலையாளத் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார்,
Advertisement
Advertisement
ஹய்வான் எனப் பெயரிட்ட இப்படத்தில் முன்னணி நடிகர்களாக அக்ஷய் குமார் மற்றும் சயிஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். த்ரில்லர் ஆக்ஷன் கதையாக இது உருவாகியுள்ளது.
The trailer for the movie haiwaan directed by Priyadarshan and starring Akshay Kumar and Saif Ali Khan, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.