FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அனிமே ரசிகர்களுக்கு நற்செய்தி: ஒன் பீஸ் திரைப்படங்கள் அறிவிப்பு!

ஒன் பீஸ் அனிமே தொடர் இரு திரைப்படங்களாக உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒன் பீஸ்
பகிர்:

ஒன் பீஸ் அனிமே தொடர் இரு திரைப்படங்களாக உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனிமே படங்கள் மற்றும் காமிக்ஸ்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. உலகில் அதிகளவு ரசிகர்களைக் கொண்ட அனிமே தொடர்களில் ‘ஒன் பீஸ்’ (One piece) முதலித்தில் உள்ளது.

ஒன் பீஸ் என்பது எய்ச்சிரோ ஒடா என்பவரால் எழுதப்பட்ட ஜப்பானிய அனிமே தொடர். 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காமிக்ஸ் தொடர் இன்று வரை தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

முன்னாள் கடற்கொள்ளையர்களின் ராஜா ஒருவர் தான் இறப்பதற்கு முன் ‘ஒன் பீஸ்’ எனப்படும் பெரும் புதையலை ஒரு தீவில் மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார். அந்தப் புதயலைத் தேடி கண்டுபிடித்து, கடற்கொள்ளையர்களின் ராஜாவாக மாறத் துடிக்கும் இளைஞனான மங்கி டி லூஃபி மற்றும் அவனது குழுவின் பயணமே இந்தக் கதை.

இது காமிக்ஸ் ஆக மட்டுமின்றி அனிமே கார்ட்டூன் தொடராகவும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஒன் பீஸ் தொடரை திரைப்படமாகத் தயாரிப்பதாக ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் நிறுவனமான ’டோயி அனிமேஷன்’ அறிவித்துள்ளது. இந்நிறுவனம் டிராகன் பால், ஒன் பீஸ் மற்றும் செய்லர் மூன் போன்ற உலகப் புகழ்பெற்ற அனிமே தொடர்களைத் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், ஒன் பீஸ் தொடரை 'ஒன் பீஸ்: காட் வேலி' (One Piece: God Valley) மற்றும் 'ஒன் பீஸ்: பாட்' (One Piece: Baad) என இரண்டு அனிமே திரைப்படங்களாகத் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 'காட் வேலி' 2027-ஆம் ஆண்டிலும், 'பாட்' 2029-ஆம் ஆண்டிலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

முன்னதாக, ஒன் பீஸ் அனிமே தொடரை லைவ் - ஆக்‌ஷன் தொடராக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தயாரித்து இரு சீசன்களை வெளியிட்டிருந்தது. இதன் மூன்றாவது பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஒன் பீஸ் திரைப்படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், உலகம் முழுவதுமுள்ள அனிமே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Reports have emerged that the One Piece anime series is being adapted into two films.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments