திரௌபதி 2 படத்தின் பாடல் போஸ்டர்.  படம்: எக்ஸ் / லஹரி மியூசிக்.
செய்திகள்

திரௌபதி 2 படத்தில் மோகன் ஜி எழுதிய புதிய பாடல்!

திரௌபதி 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் குத்துப் பாடலாகவும் மறுபக்கம் தெய்வீக பாடலாகவும் இருக்கும் மாதிரியான காட்சிகளுடன் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தின் முதல் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குறிப்பிட்ட பிரிவினரிடையே ஆதரவு பெற்றது.

தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார்.

பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையில் ’தாராசுகி ராம்’ எனும் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை இயக்குநர் மோகன் ஜி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

An update has been released regarding the second song of the film Draupathi 2, directed by Mohan G.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீது மோகன்தாஸ் பெண்கள் முன்னேற்றத்திற்கான குறியீடு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 26

தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை! பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீஸ் இல்லை!!

ஆனந்த வாழ்வு தரும் ஆனைமுகன்

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீர்கள்: தமிம் இக்பால்

SCROLL FOR NEXT