ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!
ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள் திரைப்படங்கள் குறித்து...
மாஸ்க், அங்கம்மாள் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் கவின் இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில் புதிய திரைப்படத்தில் நடித்திருந்தார். மாஸ்க் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கியிருந்தார்.
மாஸ்க் திரைப்படம் இன்று(ஜன. 9) ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.
பெண்கள் அணியும் ரவிக்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. பிரதான பாத்திரத்தில் நடிகை கீதா கைலாசம் நடித்துள்ளார்.
அங்கம்மாள் திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The films Mask and Angammaal have been released on an OTT platform and are attracting the attention of viewers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.