நாயகனாகும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாவது குறித்து...
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் “எல்லம்மா” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகின்றார்.
சச்சின், சிங்கம், புலி, புஷ்பா, குபேரா போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் இசையால், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்த நிலையில், இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் “எல்லம்மா” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, எல்லம்மா திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் இன்று (ஜன. 15) வெளியிட்டுள்ளனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Popular music composer Devi Sri Prasad is making his debut as a lead actor with the new film titled "yellamma".
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.