ஓடிடியில் வெளியானது நஸ்லனின் மாலிவுட் டைம்ஸ்!
மாலிவுட் டைம்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறித்து...
மலையாள நடிகர் நஸ்லன் நாயகனாக நடித்த “மாலிவுட் டைம்ஸ்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
பிரேமலு திரைப்படம் மூலம் பெருமளவில் கவனமும், மொழிகளைக் கடந்த ரசிகர்களையும் பெற்றவர் நடிகர் நஸ்லன். அவர் நடித்து வெளியான “ஆலப்புழா ஜிம்கானா” படமும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அபினவ் சுந்தர் இயக்கத்தில் நஸ்லன் நாயகனாக நடித்து வெளியான புதிய படம் “மாலிவுட் டைம்ஸ்”. சினிமா மீது ஆர்வம் கொண்ட இளைஞனின் ஹாரர் படம் எடுக்கும் முயற்சியைக் கதைகளமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான வினீத் ஸ்ரீனிவாசன், ஷராஃபூதீன், சங்கீத் பிரதாப், பசில் ஜோசப், ரோஷன் ஷாநவாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், திரையரங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற “மாலிவுட் டைம்ஸ்” படம் இன்று (ஜூலை 3) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The movie "Mollywood Times," starring Malayalam actor Naslen in the lead role, was released on an OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.