முகப்பு
செய்திகள்

டியூன் 3-ம் பாகம் டிரைலர் வெளியானது!

ஹாலிவுட் படமான டியூன் 3-ம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 11:09 am IST
டியூன் 3
பகிர்:

ஹாலிவுட் படமான டியூன் 3-ம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற அறிவியல் புனைவு திரைப்படம் டியூன். இப்படத்தின் முதல் இரு பாகங்கள் முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஒரு பெரிய வம்சத்தின் இளவரசன் சதியால் அனைத்தையும் இழந்து பாலைவனத்தில் தஞ்சமடைவான். பின்னர், அங்குள்ள பாலைவனப் பழங்குடிகளின் தலைவனாகும் அவன், தன் எதிரிகளைப் பழிவாங்கி பேரரசனாக மீண்டும் எழுவதே டியூன் படத்தின் முதல் இரு பாகங்களின் கதை. 1965-இல் எழுதப்பட்ட அறிவியல் புனைவுக் கதையான ‘டியூன்’ நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இப்படத்தின் நாயகனாக டிமோதி ஷலமேட் மற்றும் நாயகியாக ஸெண்டாயா நடித்துள்ளனர்.

அக்டோபர் 2021-ல் வெளியான முதல் பாகம் 6 ஆஸ்கர் விருதுகளையும், மார்ச் 2024-ல் வெளியான இரண்டாம் பாகம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பேரரசனாக மாறிய நாயகனின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுவதாக மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

டியூன் 3-ம் பாகம் வருகிற டிசம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.

summary

Dune Part Three trailer released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments