அருவி தொடர் நாயகியின் புதிய தொடர் ‘சிறகுகள்’!
அருவி தொடர் நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு குறித்து...
அருவி தொடர் நாயகி ஜோவிதா லிவிங்ஸ்டன் நடிக்கும் புதிய தொடரான ‘சிறகுகள்’ சீரியலின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரபான பூவே உனக்காக தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகை லிவிங்ஸ்டனின் மகள் நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன்.
இந்தத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து அருவி தொடரில் நடித்தார். இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெளனம் பேசியதே தொடரில் நடித்தார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, சினிமாவிலும் நடித்து வரும் ஜோவிதா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ’சிறகுகள்’ என்ற புதிய தொடரில் நடிக்கிறார்.
சிறகுகள் தொடரில், ஜோவிதாவுக்கு ஜோடியாக ஆனந்த ராகம் தொடர் நாயகன் அழகப்பன் நடிக்கிறார். இவர் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள், ஆபிஸ், மாப்பிள்ளை உள்ளிட்ட தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர்.
இந்தப் புதிய தொடரில் நடிகை ஜோவிதா, நடிகர் அழகப்பன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் இந்தத் தொடரில் அரவிந்த், ஜீவா ரவி, ராஜேஸ்வரி, உதய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
வளர்ப்புத் தாயிடம் நாயகி(ஜோவிதா) துன்பங்களை அனுபவிக்கிறார். இதனைக் கண்ட நாயகன்(அழகப்பன்) எவ்வாறு நாயகியை மீட்கிறார் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சிறகுகள் தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
A preview video has been released for the new serial ‘Siragugal’, starring Jovita Livingston, the lead actress of the series ‘Aruvi’.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.