FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சில பயணங்கள் அசாதாரணமானவை! - முதல்வர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு!

முதல்வர் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளது குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 9:37 pm IST
முதல்வர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன்... - Instagram/sivakarthikeyan
பகிர்:

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்யை தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஜூலை 15) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதுபற்றி, நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

Advertisement

Advertisement

“மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தை வழிநடத்துவது வரை... சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை.

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தது ஒரு பெருமைக்குரிய தருணம்.

‘ரசிகன் எக்ஸ்பிரஸ்’ முதல் ‘விஜய் அவார்ட்ஸ்’ மேடை வரை, கோட் திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல்... இப்போது உங்களுடன் இந்தத் தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும்.

சகோதரத்துவம், பிணைப்பு... அது தொடர்கிறது” எனக் கூறியுள்ளார்.

summary

Actor Sivakarthikeyan met TN CM Vijay in person and offered his congratulations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments