FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஏழு கடல் ஏழு மலை வெளியீடு எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு!

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது...

Updated On : 19 ஜூலை 2026, 1:05 pm IST
இயக்குநர் ராம், நடிகர் நிவின் பாலி
பகிர்:

இயக்குநர் ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் வெளியீடு குறித்து அப்டேட் பகிரப்பட்டுள்ளது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது. அங்கு, தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வானது.

Advertisement

Advertisement

இப்படி, சர்வதேச திரைவிழாக்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இன்னும் திரையரங்குகளில் வெளியீடு காணாமல் இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை நாளை (ஜூலை 20) மாலை 6.33 மணிக்கு அறிவிப்பதாக படக்குழு விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளனர்.

An update has been shared regarding the release of the film Ezhu Kadal Ezhu Malai, directed by Ram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments