காலத்தால் அழியாதது... முதல்வர் விஜய்யுடனான நினைவுகளைப் பகிர்ந்த ஸ்வாதி!
நடிகை ஸ்வாதி முதல்வர் விஜய் உடனான பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது குறித்து...
நடிகை ஸ்வாதி முதல்வர் விஜய் உடனான பழைய நினைவுகளைப் பகிர்ந்து, “என்னுடைய முதல் நாயகன், இளைய தளபதி...” என உருக்கமாக நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நடிகராக முதல்வர் விஜய் நடித்த கடைசி திரைப்படமாக ஜன நாயகன் நேற்று (ஜூலை 23) உலகெங்கும் வெளியானது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாக வெளியானது.
முதல்வர் விஜய்யுடன் நடிகை ஸ்வாதி 1995ல் தேவா, அடுத்தடுத்த ஆண்டுகளில் வசந்த வாசல், செல்வா ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
தற்போது, ஸ்வாதி சின்னதிரை தொடர்களில் நடித்து வருகிறார். ஜன நாயகன் வெளியீட்டை முன்னிட்டு ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தளபதி விஜய்யுடனான பழங்காலத்து நினைவுகளை மீட்டெடுத்தல் என்பது பொக்கிஷமானது. என்னுடைய பழைய ஆல்பங்களில் பார்க்கும்போது இந்த அழகான ஞாபங்கள் கிடைத்தன. சில தருணங்கள் உண்மையிலேயே காலத்தால் அழியாதது.
என்னுடைய முதல் படத்தில் உங்களுடன் இருந்து, உங்களின் கடைசி படமான ஜனநாயகன் வரைக்குமான திரைப் பயணத்துக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள்.
அன்புக்குரிய நடிகரில் இருந்து முதல்வர் வரைக்கும் உங்களது அற்புதமான பயணத்தைப் பார்த்து உத்வேகம் பெற்றுள்ளேன். உங்களது வெற்றி கடின உழைப்பு, விடாமுயற்சி, மீண்டெழுதல் போன்றவற்றின் பிரதிபலிப்பாக இருக்கிறது. கணக்கில்லாத சவால்கள் இருந்தும், நீங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. இன்று, மிகப்பெரிய மைல்கல்லையும் எட்டியுள்ளீர்கள்.
திரையில் முழுமையான என்டர்டெயினர். இன்று, உங்களை மக்களுக்காக அர்பணித்துள்ளீர்கள். மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். திரைத்துறை, அரசியலில் மிளிருவது சாதாரண சாதனையல்ல; ரீல் நாயகனில் இருந்து (ரியல்) நிஜமான தலைவனாக புதிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளீர்கள்.
இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் முதல்வர் சார். உங்களது புதிய வாழ்க்கையிலும் வெற்றியடைய வாழ்த்துகள்.
உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது நண்பர்களும் உலகெங்கும் உள்ள ரசிகர்களும் நான் எப்போது உங்களைச் சந்திப்பேன் எனக் கேட்கிறார்கள். அந்த நாள் விரைவில் வருமென நினைக்கிறேன். மனமார்ந்த மரியாதை மற்றும் வாழ்த்துகள் எப்போதுமே எனக் கூறியுள்ளார்.
Vijay's former co-star Swathi pens heartfelt note upon Jana Nayagan's release
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.