FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகும் ராமாயணா படத்தின் டிரைலர்!

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடித்துள்ள ராமாயணா படத்தின் டிரைலர் தேதி, நேரம் குறித்து...

Updated On : 28 ஜூலை 2026, 9:25 pm IST
ராமாயணா படத்தின் காட்சி. - படம்: எக்ஸ் / தி வேர்ல்டு ஆஃப் ராமாயணா.
பகிர்:

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடித்துள்ள ராமாயணா முதல் பாகத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 4.15 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷ் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் அனுமனாக நடித்திருப்பவர் மிகவும் கவனம் ஈர்ப்பார் என படக்குழு கூறியிருந்தது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தின் கிளிம்ஸ் விடியோவில் மிகப் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், கம்பீரமான ரன்பீர் தோற்றம், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது.

சோனி பிக்சர்ஸ் ஸ்டூடியோஸ் வாங்கியிருப்பதால் இந்தப் படத்தின் டிரைலர் ஜூலை 24ல் வெளியாகவிருந்தது மற்றுமொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Ramayana film Trailer date and time announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments