FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த முதல் ஹாலிவுட் படமாக ஸ்பைடர்மேன்!

இந்தியாவில் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே முதல் நாள் வசூல் குறித்து...

Updated On : 31 ஜூலை 2026, 12:56 pm IST
ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே - யூடியூப்
பகிர்:

இந்தியாவில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த முதல் ஹாலிவுட் படமாக ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே சாதனை படைத்துள்ளது.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம், இந்தியாவில் வியாழக்கிழமையில் (ஜூலை 30) வெளியானது.

2021-ல் ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே வெளியாகியுள்ளது. இதற்கிடையில் வெளியான மார்வெல் படங்கள் அவ்வளவாக எதுவும் வரவேற்பு பெறவில்லை.

Advertisement

Advertisement

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும், எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரியஸின் 4வது படமாகவும் வந்திருக்கிறது, ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே.

இந்த நிலையில், இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ. 72.44 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனையை ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் முதல் நாள் வசூல்தான் (ரூ. 60 கோடி) சாதனையாக இருந்தது. அதனை ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஷாருக்கானின் பதான் மற்றும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் முதல் நாள் வசூலையும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே முறியடித்துள்ளது.

summary

Tom Holland's Spider-Man Brand New Day Box Office Collection Day 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments