148 மடங்கு லாபம் பெற்ற ஹாரர் திரைப்படம்..! இந்தியாவிலும் அதிகரிக்கும் வரவேற்பு!
இந்தியாவிலும் வரவேற்பைப் பெறும் அமெரிக்க ஹாரர் திரைப்படம் குறித்து...
ஹாலிவுட் பட இயக்குநர் கர்ரி பார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’அப்செஸன்' என்ற ஹாரர் திரைப்படத்துக்கு இந்தியாவிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் அமெரிக்காவில் கடந்த மே 15ஆம் தேதி வெளியாக, இந்தியாவில் மே 29ஆம் தேதி வெளியாகியது.
இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 1 மில்லியன் டாலர் (10 லட்சம் டாலர்) அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரைக்கும் ரூ.148 மில்லியன் டாலர் (14.8 கோடி டாலர்) வசூலித்துள்ளது. 148 மடங்கு லாபம் சம்பாதித்து அசத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன் கதாபாத்திரத்தில் பியர், அவரது காதலி இண்டே நவரெட் கதாபாத்திரத்தில் நிக்கியும் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான ஹிந்தி படமான சந்தே மேரே தொல் என்ற படத்தைவிட இந்தப் படம் அதிகமாக வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தப் படம் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலும் வரவேற்பு பெறும் இந்தப் படம், இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ.11.5 கோடி வசூலித்து ஆச்சரியம் அளித்துவருகிறது.
Obsession box office collection day 4: A Horror Film That Earned 148 Times Its Investment! Growing Popularity in India as Well!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.