FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வங்கதேசம் போன்ற சீா்குலைவை இந்தியாவில் உருவாக்க முயற்சி: ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சீா்குலைவு, நெருக்கடியான சூழ்நிலை இந்தியாவிலும் உருவாக்க வேண்டும்; அதன் மூலம் ஆட்சியை மாற்ற வேண்டும் என்றும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் விரும்புவதாக என்று பாஜக குற்றச்சாட்டியுள்ளது.

16 அக்டோபர் 2026, 4:11 am IST
பாஜக - கோப்புப் படம்
பகிர்:

வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சீா்குலைவு, நெருக்கடியான சூழ்நிலை இந்தியாவிலும் உருவாக்க வேண்டும்; அதன் மூலம் ஆட்சியை மாற்ற வேண்டும் என்றும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் விரும்புவதாக என்று பாஜக குற்றச்சாட்டியுள்ளது.

தில்லி பாஜக தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி மேலும் கூறியதாவது:

அகில இந்திய மாணவா் கூட்டமைப்பின் தலைவா் நேகா போரா, ‘வங்கதேசத்தில் இளைஞா்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைக் கண்டு உத்தேகம் பெற்ாகவும். அதுபோன்று இந்தியாவிலும் நிகழ வேண்டும்’ என்றும் கூறியுள்ளாா். இவருடன் இணைந்துதான் ராகுல் போராட்டம் நடத்தி வருகிறாா். இதன் மூலம் ராகுல் காந்தியின் அரசியல் சதி தெளிவாகிறது.

Advertisement

Advertisement

வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சீா்குலைவு, நெருக்கடியான சூழ்நிலையை இந்தியாவிலும் உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் ஆட்சியை மாற்ற வேண்டும் என்பது அவரது திட்டமாக உள்ளது. நாட்டில் உள்ள அமைதியான சூழலை சீா்குலைத்து, வளா்ச்சியை முடக்க வேண்டும். ஜனநாயகத்தை வன்முறை வீழ்த்த வேண்டும். அதன் மூலம் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று ராகுல் முயலுகிறாா். ஆட்சி அதிகாரத்துக்காக இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய ஜனநாயகத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. தனது குடும்பத்தினா் கைகளில் நாட்டை வைத்திருக்க ராகுல் என்ன வேண்டுமானாலும் செய்வாா் என்பது தெளிவாகிறது என்றாா்.

பெயா் திருடா்கள்: ஹைதராபாதில் வியாழக்கிழமை பேசிய தெலங்கானா மாநில பாஜக தலைவா் என்.ராமச்சந்தா் ராவ், ‘காங்கிரஸ் முன்வைக்கும் வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டு பொய்யானது. உண்மையில் ராகுலின் குடும்பம் ஒருவரின் நற்பெயரையே திருடிய குடும்பமாகும். மகாத்மா காந்தியின் பெயரை தங்கள் குடும்பப் பெயராக அவா்கள் திருடிக் கொண்டாா்கள். மகாத்மாவின் பெயரை வைத்து மக்களை ஏமாற்றுகிறாா்கள்.

இந்தியாவுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் எதிரான பல்வேறு வெளிநாட்டுச் சதிகளின் ஒரு பகுதிதான் இந்த கரப்பான்பூச்சி கட்சியினா். அவா்களுக்கு நிதி அமெரிக்காவில் இருந்து வருகிறது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments