பிருத்விராஜ் - ராகுல் சதாசிவன் படத்தின் போஸ்டர்!
பிருத்விராஜ் நடிக்கும் ஹாரர் படத்தின் போஸ்டர்...
ஹாரர் இயக்குநர் ராகுல் சதாசிவன் நடிகர் பிருத்விராஜை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
பூதகாலம், பிரம்மயுகம் உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் ராகுல் சதாசிவன். இறுதியாக, நடிகர் பிரணவ் மோகன்லாலை வைத்து டீயஸ் ஈரே என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் ரூ. 80 கோடிக்கு அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
தற்போது, ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பிருத்விராஜ் ஹாரர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Horror director Rahul Sadasivan is set to direct a new film starring actor Prithviraj.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.