பரபரப்பான கிளைமேக்ஸ்... ஒரே நாளில் நிறைவடைந்த இரண்டு தொடர்கள்!
புனிதா, மணமகளே வா தொடர்கள் நிறைவடைந்தது தொடர்பாக...
புனிதா, மணமகளே வா தொடர்கள் ஒரே நாளில் நிறைவடைந்தன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியத்துவம் பெறா (non prime) நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் உள்ளிட்ட பலரும் மதிய நேர தொடர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
அதன்படி, ஹரிகா சாது நடித்து வந்த மணமகளே வா தொடர், கடந்த 2024 ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது.
இந்தத் தொடரில், விக்கி ரோஷன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் இந்தத் தொடரில் லோகேஷ் பாஸ்கர், லட்சுமி, ஜெயந்தி நாராயணன், சுவேதா, அணு, டேவிட் ராஜா, நிரஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
திங்கள் முதல் சனிக் கிழமை வரை பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மணமகளே வா தொடரானது, 543 எபிசோடுகளுடன் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது.
அதேபோல, சன் தொலைக்காட்சியில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்த புனிதா தொடர், கடந்த 2024 அக்டோபர் மாதல் முதல் ஒளிபரப்பாகி வந்தது.
புனிதா தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்தத் தொடர் 469 எபிசோடுகளுடன் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது.
இந்த இரு தொடர்களும் விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன் நிறைவடைந்தன.
The serials Punitha and Manamagale Vaa concluded on the same day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.