கவனம் ஈர்க்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள அங்கீகாரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், நாயகனாக அறிமுகமாகும் நடிகர் கே.ஜெ.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. இதில் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisement