FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

படத் தயாரிப்பில் சிபிராஜ்

வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ்.

18 அக்டோபர் 2026, 4:44 pm IST
பகிர்:

வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம், ஓ.டி.டி. தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். இதற்காக, 'அண்டர்டாக் ஃபிலிம்ஸ்' எனும் நிறுவனத்தை சிபிராஜ் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'புரொடக்ஷன் நம்பர் 1' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு

விறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'ஜீப்ரா' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

Advertisement

Advertisement

சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், அவரே தயாரித்தும் வருகிறார். சிபிராஜ், ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதை, பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments