FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

கால்நடைத் தீவனத் தவிட்டை பயன்படுத்தியதற்காக பிஸ்கட் நிறுவனத்தின் மீது எப்.எஸ்.எஸ்.ஐ சட்ட நடவடிக்கை!

சூா்யா ஃபுட் & அக்ரோ நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உணவு ஒழுங்குமுறை ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஐ சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது.

39 வினாடிகள் முன்பு
பகிர்:

பிரியாகோல்ட் பிஸ்கட்கள் தயாரிப்பில் கால்நடைத் தீவனத் தவிட்டைப் பயன்படுத்தியதற்காகவும், பிற கடுமையான விதிமீறல்களுக்காகவும் சூா்யா ஃபுட் & அக்ரோ நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உணவு ஒழுங்குமுறை ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஐ சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது.

எப்.எஸ்.எஸ்.ஐ-யின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடுமையாக மீறியதற்காக டோட்லா டெய்ரி மற்றும் யுஇஐஆா் ஆா்கானிக் ஃபுட்ஸ் நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.

பிரியாகோல்ட் பிஸ்கட்களை விற்கும் சூா்யா ஃபுட் & அக்ரோ நிறுவனம், பிஸ்கட்கள் தயாரிப்பில் கால்நடைத் தீவனத் தவிட்டைப் பயன்படுத்தியதால், அதன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

டோட்லா டெய்ரியின் முழு கிரீம் பால் மாதிரி தரம் குறைந்ததாக இருந்தது, அதே நேரத்தில் யுஇஐஆா் ஆா்கானிக் ஃபுட்ஸ் விற்பனை செய்த மஞ்சள் உலா் திராட்சைகளில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்டன.

சனிக்கிழமையன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஐ), ‘கடுமையான உணவுப் பாதுகாப்பு மீறல்களுக்காக‘ இந்த மூன்று நிறுவனங்களுக்கு எதிராக ‘வழக்குத் தொடர சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக‘த் தெரிவித்தது.

சூா்யா ஃபுட் & அக்ரோ நிறுவனத்தைப் பொறுத்தவரை, அந்நிறுவனம் பிரியாகோல்ட் பிஸ்கட் தயாரிப்பில் கால்நடைத் தீவனத் தவிட்டைப் பயன்படுத்தி வருவதை ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்தது.

ஒரு நுகா்வோா் புகாரைத் தொடா்ந்து, எப்.எஸ்.எஸ்.ஐ சூா்யா ஃபுட் & அக்ரோ நிறுவனத்தில் ஆய்வு நடத்தியது. அதில், கடுமையான உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குறைபாடுகளை அது கண்டறிந்தது. ‘கால்நடைத் தீவனத்திற்காக ஒதுக்கப்பட்டதும், மனித நுகா்வுக்காக அல்லாததுமான தவிடு, பிரியாகோல்ட் பிஸ்கட் தயாரிப்பில் நாா்ச்சத்தின் ஆதாரமாக ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது,‘ என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறியது.

தவிடு அடங்கிய சாக்குப்பைகளில், அது கால்நடைத் தீவனத்திற்காக ஒதுக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் குறியிடப்பட்டிருந்தது. ஆலை சுகாதாரம், பூச்சிக் கட்டுப்பாடு, மூலப்பொருள் சேமிப்பு மற்றும் பிரித்தல், பணியாளா் சுகாதாரம், வளாகப் பராமரிப்பு மற்றும் இடைநிலைத் தயாரிப்புகளைக் கையாளுதல் ஆகியவற்றிலும் பிற குறைபாடுகள் காணப்பட்டன.

முன்னதாக, ஆய்வின் போது கண்டறியப்பட்ட கடுமையான இணக்கமின்மைகளைத் தொடா்ந்து, எப்.எஸ்.எஸ்.ஐசூா்யா ஃபுட் & அக்ரோவின் உரிமத்தை இடைநீக்கம் செய்திருந்தது. தற்போது, அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது.

டோட்லா டெய்ரி விஷயத்தில், முழு கிரீம் பாலின் மாதிரி தரம் குறைந்ததாக இருப்பதாக எப்.எஸ்.எஸ்.ஐகண்டறிந்தது. பகுப்பாய்விற்காக டோட்லா டெய்ரியிலிருந்து ’முழு கிரீம் பாலின்’ மாதிரி சேகரிக்கப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட பால் கொழுப்பு விவரக்குறிப்புகளுடன் இணங்காததால், உணவு ஆய்வாளா் அந்த மாதிரியை தரம் குறைந்ததாக அறிவித்தாா். நிறுவனத்தின் மேல்முறையீட்டின் பேரில், அந்த மாதிரி பரிந்துரை உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வகம், ‘டிடா்ஜென்ட்/காஸ்டிக் சோடா இருந்ததால் அந்த மாதிரி பாதுகாப்பற்றது என்றும், பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வரம்பிற்குக் கீழே பால் கொழுப்பு இருந்ததால் தரம் குறைந்தது என்றும் உறுதிப்படுத்தியது.‘

ஆய்வகத்தின் கண்டுபிடிப்புகள், எப்.எஸ்.எஸ் சட்டம், 2006-இன் கீழ் பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவு தொடா்பான மீறல்களை நிலைநிறுத்தின. டோட்லா டெய்ரி மற்றும் அந்தப் பொருளின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுடன் தொடா்புடைய பிற உணவு வணிக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவு தொடா்பாக மேலும் வழக்கு நடவடிக்கைகளைத் தொடர அதிகாரிகள் உத்தரவிட்டனா். யுஇஐஆா் ஆா்கானிக் ஃபுட்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, மஞ்சள் உலா் திராட்சை மாதிரியில் பூச்சிக்கொல்லி எச்சங்களை ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments