FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல்!

கொலைச்சேவல் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

கொலைச்சேவல் போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு நடித்துள்ள கொலைச்சேவல் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வி.ஆர். துதிவாணன் எழுதி, இயக்கியுள்ள கொலைச்சேவல் படத்தில், கலையரசன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு நடித்திருக்கிறார்.

ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா பாத்திரத்தில் நடித்து பிரபலமான தீபா பாலு, கொலைச்சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

Advertisement

Advertisement

இப்படத்தை ஆர்பி பிலிம்ஸ், ஆர்பி பாலா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு பி.ஜி. முத்தைய்யா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைத்துள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் (கலையரசன் - தீபா பாலு) தங்களின் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும்போது எதிர்கொண்ட சவால்களை பிரதானப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கொலைச்சேவல் திரைப்படம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், கொலைச்சேவல் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

summary

The film Kolaiséval, starring Heart Beat actress Deepa Balu, has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments