இன்று முதல் சங்கவி - எதிர்நீச்சல் நடிகையின் பக்தித் தொடர்!
நடிகை சங்கவியின் பாளையத்து அம்மன் தொடர் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகை சங்கவியின் பாளையத்து அம்மன் தொடர் இன்று(மே 18) முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர் அஜித்தின் அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சங்கவி, ரசிகன், நாட்டாமை, மன்னவா,கோயம்புத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து சின்ன திரையில் கோகுலத்தில் சீதை தொடர் மூலம் அறிமுகமான சங்கவி, காலபைரவன், தாய் வீடு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பாளையத்து அம்மன் என்ற தொடரின் மூலம் சங்கவி மீண்டும் சின்ன திரையில் நடிக்கிறார். இந்தத் தொடரில், எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிபிரியாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்தத் தொடரில் கமலேஷ், அனு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பக்தி, குடும்பப் பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி மர்மம் கலந்த குடும்பத் தொடராக பாளையத்து அம்மன் தொடர் எடுக்கப்படுகிறது.
பக்தித் தொடர்களுக்கு இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், பாளையத்து அம்மன் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயா தொலைக்காட்சியில் இன்று முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Actress Sangavi's series, Palayathu Amman, is set to air starting today (May 18).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.