சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?
சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் ‘கர’. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தனுஷ் சென்ற ஆண்டு நடித்த குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்கள் எதுவும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. மேலும், ராயன் தவிர்த்து சில ஆண்டுகளாக நல்ல கமர்ஷியல் வெற்றியையும் அவர் பெறவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் தனுஷ் அடுத்தப் படத்தில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்குவா படத்தின் தோல்விக்குப் பின்னர் படம் இயக்காமல் இருந்த சிவா கடைசியாக அஜித் குமார் நடித்த கேம்பா கோலா குளிர்பான விளம்பரத்தை இயக்கியிருந்தார்.
ஏற்கனவே தனுஷ் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் சிவாவுடன் இணையும் படத்தில் எப்போது நடிப்பார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இப்படம் அதிரடி கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
Dhanush Acting Under the Direction of Siruthai Siva
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.