டி55: தனுஷ் நடனத்தால் திரையரங்கம் வெடிக்கும்..! சாண்டி மாஸ்டர் புகழாரம்!
நடிகர் தனுஷின் நடனம் குறித்து நடன இயக்குநர் சாண்டி கூறியிருப்பதாவது...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் டி55 படத்தில் நடிகர் தனுஷ் ஆடியுள்ள நடனத்தினால் திரையரங்கமே வெடிக்கும் என நடன இயக்குநர் சாண்டி புகழ்ந்து பேசியுள்ளார்.
தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நடிகர் மம்மூட்டியும் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் யூடியூப் நேர்காணல் ஒன்றில் இந்தப் படம் குறித்து கூறியிருப்பதாவது:
சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷ் படத்திற்கு நடனத்தை இயக்கி முடித்தேன். அந்தப் பாடலில் தனுஷின் நடனம் மிகவும் அருமையாக இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தனுஷ் முழுமையானப் பாடலுக்கும் நடனமாடியுள்ளார். அவரது நடனத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். இது திரையரங்குகளில் ரசிகர்களுக்கு பிளாஸ்டாக இருக்கும்.
காமிரா நிறுத்தியதும் அவர் என்னிடம் சரியாகத்தான் ஆடினேனா என தயக்கத்துடனேயே கேட்பார். 5,6,7,8 என எண்களை எண்ணியதும் அவரிடம் வரும் ஆற்றல் எங்கிருந்து வருகிறதெனத் தெரியாது. அவர் மிகவும் உற்சாகமான அதிக ஆற்றல் நிரம்பியவர். அவரது ஆற்றலுடன் பின்னணியில் நடனமாடுபவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அந்தளவுக்கு தனுஷ் சிறப்பாக நடனமாடுகிறார் என்றார்.
Recently, in an interview, actor and dance choreographer Sandy revealed details about a song that he choreographed for Dhanush in D55
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.