முக்கியமான கதாபாத்திரத்தில் கிச்சா சுதீப்..! மனம் திறந்த விக்ராந்த்!
தனது புதிய திரைப்படத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ளது பற்றி நடிகர் விக்ராந்த் கூறியிருப்பதாவது...
அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனிசாமி இயக்கும் ’அன்டர் 18’ படத்தில் கிச்சா சுதீப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ்காரன் படத்தைத் தயாரித்த பி. ஜெகதீஷ் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ராந்த் - ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்த கார்த்திக் பழனிசாமி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டப்போது அதில், “அரசினர் கூர்நோக்கு இல்லம். இலவச சட்ட உதவிக்கு அணுகவும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், இந்தப் படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விக்ராந்த பேசியிருந்தாவது:
கிச்சா சுதீப் அண்ணாவுக்கு சிறப்பு நன்றி. ’இரண்டாம் பாதியில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிருக்கிறது. அதில் கிச்சா சுதீப் மாதிரியான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும்’ என ஒருநாள் கார்த்திக் சார் என்னிடம் கூறினார். அதனால் கிச்சா சுதீப் சாரை முயன்றோம்.
சுதீப் சாரிடம் கேட்டபோது, ‘இது உனக்காவும் உனது கதைக்காவும் செய்கிறேன். வேறெதுவும் வேண்டாம்’ என என்னிடம் கூறினார். அப்படித்தான் அவர் இந்தப் படத்தில் சேர்ந்தார். அதனால், அவருக்கும் சிறப்பான நன்றி எனக் கூறினாட்.
சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் முக்கியமான படப்பிடிப்பு ஒசூர், செங்கல்பட்டு, சென்னையில் நடைபெறவிருக்கிறது.
Vikranth says Kichcha Sudeep has an important character in Under 18
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.