FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இளம் மனங்களில் வன்முறையை வளர்க்காதீர்கள் வெற்றி மாறன்: லெனின் பாரதி

இயக்குநர் வெற்றி மாறனுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன...

இயக்குநர் வெற்றி மாறன் தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வாளுடன்.
பகிர்:

இயக்குநர் லெனின் பாரதி அரசன் திரைப்பட கிளிம்ஸை கண்டித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான அரசன் திரைப்படம் கடந்த ஓராண்டாக படப்பிடிப்பில் உள்ளது. ஆனால், இடைவெளிவிட்டு எடுக்கப்பட்டு வருவதால் திட்டமிட்டபடி அதன் படப்பிடிப்பு நிறைவு பெறாமல் இருக்கிறது. அதே நேரம், ரசிகர்களுக்கும் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதால் தீபாவளியை முன்னிட்டு அரசன் திரைப்படத்திற்கான சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதில், இடம்பெற்ற பாடல் வரிகளும் வன்முறைக் காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சமூக அக்கறையையும் அதன் முற்போக்கு அரசியலையும் முன்னிலைப்படுத்தும் இயக்குநர் வெற்றி மாறன் ரௌடிகளை விதந்தோத இப்படியான கதைகளை இயக்கி தவறான வழிகாட்டுதல்களைச் செய்கிறார் என எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநர் லெனின் பாரதி, “இளைஞர்களை வன்முறை மற்றும் போதை கலாசாரம் சீரழிக்கும் சூழலில்.. “நூறு பேர மட்ட அடிச்சு சுத்துவேன் சீனா..” “நூறுபேரு சுத்துப்போட்டாலும் தாஸ் அண்ணன் கொக்கி சாமான் தாண்டா பஸ்ட்டு” என வன்முறை வெறியை இளம் மனங்களில் பயிர்செய்து வளர்க்காதீர்கள் வெற்றி மாறன்..” எனத் தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

Lenin Bharathi has released a post condemning the glimpse of the film Arasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.