FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்

ஆண் பல முறை திருமணம் செய்யலாம், ஆனால் பெண் அதுபற்றி நினைக்கவே கூடாது என பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய் கருத்து..

பவன் கல்யாண் - அன்னா லெஷ்நேவா - x
பகிர்:

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பல முறை தலைப்புச் செய்தியாகியிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

பவன் கல்யாண், தனது மூன்றாவது மனைவியான ரஷிய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஷ்நேவாவை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த அறிவிப்புக்கு, பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய் எதிர்வினையாற்றியிருக்கிறார். தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, கடும் விமர்சனங்கள் எழுந்தன என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ரேணு, நமது சமூகத்தில், ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம், ஆனால், பெண்களுக்கு மட்டும் சாபமாக, மற்றொரு திருமண உறவைப் பற்றி அவர்கள் நினைக்கவே கூடாது, கடைசி காலம் வரை கவலையோடு வாழ்ந்துவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கு திரையுலகில் முக்கிய நகராக இருந்த பவன் கல்யாண், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கி, துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் மூன்று திருமணம் செய்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், மூன்றாவது மனைவியையும் அவர் விவாகரத்து செய்யவிருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1997-ஆம் ஆண்டு நந்தினி என்பவரைத் திருமணம் செய்து, இரண்டு ஆண்டுகளில் பிரிந்தார், 2009-ஆம் ஆண்டில் நடிகை ரேணு தேசாயைத் திருமணம் செய்தவர், 2012ல் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

பின்னர்தான், ரஷியக் குடிமகளான அன்னா லெஷ்நேவாவை 2013-ல் திருமணம் செய்து மகள், மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.