ஜிவி பிரகாஷ்குமாருடன் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி!
நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கவ்யா அறிவுமணி நடித்து வருவது குறித்து...
நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருடன் புதிய திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை கவ்யா அறிவுமணி நடித்து வருகிறார்.
ஜோ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ஹரிஹரன் ராம் ஜிவி பிரகாஷ் குமாரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மாளவிகா மனோஜ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இவர்களுடன் பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ், சன் டிவி தொகுப்பாளர் ராகேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை காவ்யா அறிவுமணி இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
கருடன்’, ‘மாமன்’ ஆகியவற்றைத் தொடர்ந்து லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ் குமாரே, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்துக்கு அன்புடன் மகி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.