FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிக்கும் ஜேசன் சஞ்சய்?

இயக்குநர் ஜேசன் சஞ்சய் நடிகராகத் திட்டமிட்டு வருகிறாராம்....

ஜேசன் சஞ்சய்
பகிர்:

ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குநராகத் திரைத்துறைக்கு அறிமுகமானார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஓடிடியிலும் பேசப்படவில்லை. இதனால், நடிகராகும் திட்டத்தில் ஜேசன் இருப்பதாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து, இயக்குநர் அட்லி தயாரிப்பில் கதாநாயகனாக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

ஆனால், தற்போது லைகா தயாரிப்பில் ஜேசன் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை டாடா, கராத்தே பாபு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கணேஷ் கே. பாபு இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் கதை முதலில் நடிகர் துருவ் விக்ரமுக்குச் சொல்லப்பட்டதாம். ஆனால், அவர் விலக ஜேசன் சஞ்சய்யிடம் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Details have been revealed regarding the film in which Jason Sanjay stars as the lead actor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.