இல்தகா என்றால்? காதல், பிரிவு குறித்து உருக்கம்! மனம் திறந்தார் ஜேசன் சஞ்சய்!
இல்தகா என்றால் காதலா என கேள்வி எழுப்பியதோடு, காதல், பிரிவு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜேசன் சஞ்சய்
தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், சிக்மா பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய், ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், முதல் முறையாக தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் காதல் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நடிகராக விஜய் இருந்த போது, அவரது மகன் என்பதைத் தாண்டி ஜேசன் சஞ்சய் வெளியுலகில் அதிகம் தலைகாட்டாமலே இருந்து வந்தார். தற்போது சிக்மா படத்தின் மூலம் வெளி உலகுக்கு அதிகம் தெரியப்பட்டவராக மாறியிருக்கிறார்.
Advertisement
Advertisement
அது மட்டுமல்ல, தமிழக முதல்வரின் மகன் என்ற பொறுப்பும் அவருக்கு ஏற்பட்டுள்ளது அண்மைக் கால நேர்காணல்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
அண்மையில் அவர் அளித்த நேர்காணலில், காதல், காதல் முறிவு குறித்து பேசியிருந்தார்.
இல்தகா சைஆ? என்று நேர்காணல் எடுத்தவர்கள் கேட்க, இல்தகா சைஆ என்றால் காதலா ப்ரோ என சின்னத் தம்பி பிரபு போல கேள்வி எழுப்புகிறார் ஜேசன் சஞ்சய்.
அதற்கு பதிலளித்த அவர், தனக்கு ஒரே ஒரு காதல் உறவு இருந்தது. அது கல்லூரி காலத்தில் மலர்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. அந்த அழகான உறவு, பின்னர் பரஸ்பர சம்மதத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார். ஆனால், பரஸ்பர பிரிவு என்பது எல்லாம் காதலில் இல்லை என்று நேர்காணல் எடுப்பவர்கள் கூற, அதற்கு ஜேசன் சஞ்சய் மறுப்பு எதுவும் கூறாமல் மௌனமாக தன்னுடைய அமைதி மூலம் பதிலளிக்கிறார்.
அந்த நேரத்தில் காதல் முறிவால் தான் மிகவும் மனமுடைந்திருந்தேன். அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தேன் என்றும், யுவன் சங்கர் ராஜாவின் சினிமா பாடல்களைக் கேட்டுத்தான் ஆறுதல் அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிறகு, சிக்மா திரைப்படத்தை உருவாக்கும் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். அதனால்தான், அந்த காதல் முறிவிலிருந்து வெளியேற முடிந்தது என்றும்
இப்போது அதனை நினைத்துப் பார்த்தால், காதல் முறிவு ஏற்பட்டதே நல்லதுதான் என்று தோன்றும். இப்போது அதிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதாக பகிர்ந்துகொண்டுள்ளார் ஜேசன் சஞ்சய்.
What does 'Ithaga' mean? Jason Sanjay opens up emotionally about love and separation!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.