ஜேசன் சஞ்சயின் சிக்மா வசூல் எவ்வளவு?
சிக்மா வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது...
இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லைகா தயாரிப்பில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
சந்தீப் கிஷன் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Advertisement
Advertisement
பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும், இரண்டு நாள் வசூலாக ரூ. 5 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்துடன் வெளியான ஏழுகடல் ஏழுமலை திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று ரூ. 2 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Information regarding the box office collection of the film Sigma, directed by Jason Sanjay, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.